கோவை: கோவையில் மீண்டும் கனமழை பெய்தது. இதனால் தீபாவளி விற்பனைகள் பாதிக்கப்படும் என்று வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கோவையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. கடந்த சில நாட்களுக்கு முன் கோவையில் கனமழை பெய்த நிலையில் நேற்று மீண்டும் கனமழை பெய்து வருகிறது. அவினாசி ரோடு, நஞ்சப்பா ரொடு, ரெயில் நிலைய சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
தீபாவளி நேரத்தில் கனமழை பெய்து வருவதால் வியாபாரிகள் சற்று கலக்கம் அடைந்துள்ளனர்.