கிருஷ்ணகிரி: உபரிநீரால் திருவண்ணாமலை சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6450 கன அடியாக அதிகரித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி. அணையில் இருந்து திறந்துவிடப்படும் உபரிநீரால் திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6 ஆயிரத்து 450 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையின் நீர்மட்டம் 113 அடியை எட்டிய நிலையில், கரையோர மக்கள் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.