சென்னை: தீக்காயங்கள் ஏற்பட்ட இடத்தில் காயங்கள் மறைந்தாலும், அதில் தழும்புகள் ஏற்படும். இது ஒரு சில சமயம் விரைவாக மறைந்து விடும். இன்னும் ஒரு சில பேருக்கு, இதனை சரி செய்ய சிகிச்சைகள், கிரீம்கள் போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றனர். இதனை வீட்டில் உள்ள சில பொருள்களை வைத்தே எளிமையாக தீக்காய தழும்புகளை சரி செய்யலாம். இதற்கான சில வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
பாதாம் எண்ணெய் மற்றும் எலுமிச்சைச் சாறு: இயற்கையாகவே, பாதாம் எண்ணெயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது. இதனால், இது இயல்பாகவே உடலில் உள்ள தழும்பை நீக்க உதவுகிறது. எலுமிச்சைச் சாறானது ப்ளீச்சிங் செய்ய உதவுகிறது.
முதலில் கிண்ணம் ஒன்றை எடுத்துக் கொண்டு, அதில் மூன்று முதல் நான்கு துளிகள் பாதாம் எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் இரண்டு, மூன்று துளிகள் எலுமிச்சைச் சாறு சேர்க்க வேண்டும். அந்தக் கலவையை, தழும்புகளின் மேல் அப்ளை செய்து மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு தினமும் இரண்டு முறை இதே போன்று செய்ய வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் தழும்புகள் குறையும்.
முழுமையாகத் தீக்காயங்கள் குணமடைந்த பின்னரே, இந்த முறையைப் பின்பற்றுவது அவசியம். தேனில் உள்ள சத்துக்கள், பொதுவான சருமப் பிரச்சனைகளுக்கு உதவுகிறது. இதில் உள்ள ஈரப்பதம், தழும்புகளை நீக்குவதற்கு மிக உதவியாக இருக்கும். இந்த தீக்காயத்தால் ஏற்பட்ட தழும்பின் மேல் தினமும் தேனை தடவி வர விரைவாக மறைந்து விடும்.