மயிலாடுதுறை: தஞ்சை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் இரண்டு இடங்களில் உள்ள பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியாவின் முன்னாள் நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ) சோதனை நடத்தினர். இன்று (ஆக.1) காலை முதல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
2019 பாமக பிரமுகர் கொலை வழக்கின் தொடர்ச்சியாக அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை:-
தஞ்சை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த பாமக முன்னாள் நகர செயலாளர் ராமலிங்கம் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக குறிச்சி மலையை சேர்ந்த முகமது ரியாஸ், நிஜாமாலி, ஷர்புதீன், முகமது ரிஸ்வான், அசாருதீன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மத மாற்றம் தொடர்பான மோதலில் நடந்த கொலை என்று கூறி வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சென்னையில் இருந்து வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மயிலாடுதுறை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயலாளர் நவாஸ்கான், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் முகமது பைசல் ஆகியோரது வீடுகளில் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். தேரகுண்டூர் பெருமாள் கோயில் சன்னதி தெருவில் அதிகாலை முதலே ஏற்பாடு. இதனை முன்னிட்டு சோதனை நடைபெறும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.