
சென்னை: மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:- தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சென்னை பல்லாவரம் கண்டோன்மென்ட் பகுதி மற்றும் காமராஜ் நகர் பகுதிகளுக்கு பாலத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த குடிநீரில் கழிவுநீர் கலந்ததாகவும், இதனை குடித்த அப்பகுதியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேரின் உயிரிழப்புக்கு திமுக அரசின் அலட்சியமே காரணம் என்பதால் இழப்பீடாக இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும். மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுவதை செயல்தலைவர் ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.