தஞ்சாவூர்: ஆங்கில புத்தாண்டு 2026 வரவேற்கும் விதமாக தஞ்சை பழைய பேருந்து நிலையம் முன்பு நகர் மற்றும் ஊரக காவல் துறையினர் தஞ்சை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றனர்.
ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக அனைவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்த நிலையில் பொதுமக்களுக்கு இடையூறாக குடிபோதையில் இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களில் வருகிறார்களா என சோதனையில் ஈடுபட்டு வரும் காவல் துறையினர் ஆண்டு முழுவதும் இரவு பகல் பாராமல் பொதுமக்கள் நலன்களை பாதுகாக்க பாடுபடுகின்றனர் காவலர்கள்.
2026 ஆங்கில புத்தாண்டினை வரவேற்கும் விதமாக பொதுமக்களுடன் இணைந்து தஞ்சை பழைய பேருந்து நிலையம் முன்பு தஞ்சை காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். பொதுமக்களுக்கு கேக் வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.