திருச்செந்தூர்: மழை வெள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு இன்று 15-ம் தேதி வெளியூரில் இருந்து பொதுமக்கள் வரவேண்டாம் என தெரிவித்துள்ளார்.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் மிக அதிகமாக வெள்ளநீர் வந்து கொண்டிருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தின் பல இடங்களில் சாலைகளில் வெள்ளநீர் செல்வதால் மாற்றுப் பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையும், நெல்லையில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வழியாக திருச்செந்தூர் செல்லும் சாலையும், ஏரல் வழியாக திருச்செந்தூர் செல்லும் சாலையும் மழை வெள்ளத்தால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தப் போக்குவரத்தை சீர்செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மழை வெள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு இன்று 15-ம் தேதி வெளியூரில் இருந்து பொதுமக்கள் வரவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.