சென்னை: மறு சீரமைப்பு பணிகளால் தஞ்சை, கொல்லம் மற்றும் ராமேசுவரம் செல்லும் முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களின் இயக்கத்தில் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ் பிரம்மாண்ட மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, தஞ்சை, கொல்லம் மற்றும் ராமேசுவரம் செல்லும் முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களின் இயக்கத்தில் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பிப்ரவரி 3 முதல் ஏப்ரல் 5 வரை, கீழ்க்கண்ட ரயில்கள் எழும்பூர் வராமல் தாம்பரம் ரயில் நிலையத்துடன் தனது சேவையை நிறைவு செய்யும்:
உழவன் எக்ஸ்பிரஸ் (16866): தஞ்சாவூர் – எழும்பூர். அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (20636): கொல்லம் – எழும்பூர். ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் (16752): ராமேசுவரம் – எழும்பூர். அதேபோல் மறுமார்க்கத்தில், மேற்கண்ட 3 ரயில்களும் (16865, 20635, 16751) பிப்ரவரி 4 முதல் ஏப்ரல் 6 வரை தாம்பரத்தில் இருந்தே புறப்படும்.
எழும்பூர் – மும்பை CSMT எக்ஸ்பிரஸ்: பிப்ரவரி 4 முதல் ஏப்ரல் 4 வரை எழும்பூருக்குப் பதிலாக சென்னை கடற்கரை (Beach) ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். அகமதாபாத் – திருச்சி சிறப்பு ரயில் (09419): பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அரக்கோணம், பெரம்பூர், எழும்பூர், தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு வழியாகச் செல்லாமல்; ரேனிகுண்டா, காட்பாடி, வேலூர் மற்றும் விழுப்புரம் வழியாகத் திருப்பி விடப்பட்டு உள்ளது.
திருச்சி – அகமதாபாத் சிறப்பு ரயில் (09420): இதேபோல் மறுமார்க்கத்திலும் வேலூர், காட்பாடி, திருத்தணி மற்றும் ரேனிகுண்டா வழியாக இயக்கப்படும். ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் ஏப்ரல் 4-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதால், பயணிகள் மேற்கண்ட மாற்றங்களைக் கருத்தில் கொண்டு தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
,