சென்னை: சென்னை கொடுங்கையூரில் மிட்டாய் கடையில் வேலை பார்த்து வந்த 3 குழந்தை தொழிலாளர்களை அதிகாரிகள் மீட்டனர்.
சென்னை கொடுங்கையூரில் உள்ள ஒரு மிட்டாய் கடையில் குழந்தை தொழிலாளர்கள் 3 பேர் வேலை பார்த்து வருவதாக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல்கள் கிடைத்தன.
இதையடுத்து அந்த மிட்டாய் கடைக்கு தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர். இதில் அங்கு வேலை பார்த்து வந்த 3 குழந்தைகளை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 12, 16 மற்றும் 17 வயதிலான அந்தச் சிறுவர்களை பணியில் அமர்த்தியதாக கூறப்படும் கடை உரிமையாளரான முருகன் என்பவர் மீது வழக்குபதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.