தஞ்சாவூர்: தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் தஞ்சை மாவட்டம் மட்டுமன்றி அரியலூர் திருவாரூர் நாகப்பட்டினம் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சிகிச்சை பெறுவதற்கு ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர்
தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு துறைகள் இருந்தாலும் புற்றுநோய் பிரிவு சிகிச்சை பெற நோயாளிகள் அதிகளவு வெளி மாவட்டங்களில் இருந்து வருகின்றனர்
உடல் நலம் பாதிக்கப்பட்டு .மனதளவிலும் உடல் அளவிலும் பாதிப்புக்கு ஆளாகியுள்ள புற்றுநோய் விஞ்ஞானிகளை பணியில் இருக்கும் செவிலியர்கள் மிக அலட்சியமாக நடத்துவதுடன் அவமரியாதை செய்யும் வகையில் நடந்து கொள்கின்றனர் அதோடு மட்டுமல்லாமல் நோயாளிகளிடம் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி வருகின்றனர்
நோயாளிகளிடம் கனிவு காட்ட வேண்டிய செவிலியர்கள் காட்டமாக நடந்து கொள்வது வேதனைக்கு ஆளாகியுள்ளது மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் நோயாளிகளுக்கும் செவிலியர்கள் மருத்துவர்கள் பணியாளர்கள் அனைவரும் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்த வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்