தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சாலைகளில் தேங்கி நிற்கும் மழை நீரால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியில் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையின்படி கடந்த இரண்டு நாட்களாக லேசானது முதல் அவ்வப்போது கனமழை பெய்தது.
இந்த மழையின் காரணமாக கும்பகோணம் பிரதான சாலைகளில் தண்ணீர் தேங்கி காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளதால் விரைந்து நீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மழை தொடரும் என்பதால் மேலும் தண்ணீர் தேங்கி நின்றால் வாகன ஓட்டுனர்கள் பெரும் அவதிக்கு உள்ளாவார்கள்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.