ராசிபுரம்: சிகிச்சையின் போது மாணவி மயங்கி விழுந்த நிலையில் அந்த டாக்டர் போலியானவர் என்பது தெரிய வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டையில் 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்து வீடுவீடாகச் சென்று அலோபதி மருத்துவச் சிகிச்சைகளை அளித்து வந்த போலி மருத்துவர் சீனு என்பவரை போலீசார் கைது செய்தனர்.
ஆதிதிராவிடர் நலவிடுதியில் தங்கி 8ம் வகுப்பு படிக்கும் தமது மகளுக்கு திடீர் காய்ச்சல் காரணாக, அவரது தந்தை சரவணன் போலி மருத்துவர் சீனுவிடம் அழைத்து சென்றுள்ளார். அப்போது சீனு செலுத்திய ஊசியால் மாணவி மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அடுத்து போலி மருத்துவர் சீனுவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.