சென்னை: சென்னை மாநகரப் பேருந்துகள், மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களில் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் ‘சென்னை ஒன்’ செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த செயலியில் ரூ. 1000 மற்றும் ரூ. 2000-க்கான மாதாந்திர பயண அட்டைகளை பெறுவோருக்கு ரூ. 100 சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது பயணிகளுக்கு ஒரு நன்மையாக அமையும். மேலும் இந்த மாதாந்திர பயண அட்டைகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளன. இது பயணிகள் மத்தியில் வரவேற்பையும் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.