By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரானின் சட்டவிரோத எண்ணெய் வர்த்தகம்: புதிய பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா!
    1 Min Read
    சீனாவில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
    0 Min Read
    டிரம்ப் போல தோற்றமளித்ததால் தப்பிய எருமை மாடு
    1 Min Read
    பாடகி கெனிஷாவுக்கு துபாய் நீதிமன்றம் ரூ. 1.30 லட்சம் அபராதம் விதிப்பு
    1 Min Read
    இலங்கையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: 3 சீனர்கள் கைது
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    வாடிக்கையாளர்களே தேர்வு செய்யும் எத்தனால் கலப்பு பெட்ரோல் திட்டம்
    1 Min Read
    ட்விஷா சர்மா மரணம்: மாமியாரை கைது செய்த சிபிஐ
    1 Min Read
    ஹேப்பி லேண்ட் பூங்காவில் ராட்டினம் முறிந்து விபத்து: 5 பேர் படுகாயம்
    1 Min Read
    நீட் மறுதேர்வை நேரடியாக கண்காணிக்கும் பிரதமர் அலுவலகம்!
    1 Min Read
    டெல்லியில் பலத்த மழை: 521 விமான சேவைகள் பாதிப்பு!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    வாழ்க்கை சுமூகமாக நகர பெண்கள் எடுக்கும் முடிவுகள்
    1 Min Read
    35 வயதிற்கு மேல் கருத்தரிப்பதற்கு பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகள்
    1 Min Read
    குழந்தைகள் வளரும்போது அவர்களை நல்வழிப்படுத்தும் வழிமுறைகள்
    1 Min Read
    உங்கள் கணவருடன் விவாதம் செய்யும் போது சண்டை வராமல் தடுப்பது எப்படி?
    1 Min Read
    கணவன்மார்களே மனைவியை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: மகிழ்ச்சியின் ஆழத்திற்கு இழுத்து செல்லும் ஹேவ்லாக் தீவு!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சுற்றுலா > மகிழ்ச்சியின் ஆழத்திற்கு இழுத்து செல்லும் ஹேவ்லாக் தீவு!
சுற்றுலா

மகிழ்ச்சியின் ஆழத்திற்கு இழுத்து செல்லும் ஹேவ்லாக் தீவு!

Nagaraj
Last updated: July 19, 2025 7:09 pm
By Nagaraj 3 Min Read
Share
SHARE

புதுடில்லி: ஹேவ்லாக் தீவு என்றழைக்கப்படும் இந்த தீவுக்கு காலனிய ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேய தளபதியாக இருந்த ஹென்றி ஹேவ்லாக் என்பவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. அந்தமான் தீவுக்கூட்டங்களில் மிக முக்கியமான தீவாக புகழ்பெற்றுள்ள இந்த சொர்க்கத்தீவை நாடி ஏராளமான சுற்றுலாப்பயணிகள் உலகில் பல பகுதிகளிலிருந்தும் வருகின்றனர்.

இந்த தீவில் மொத்தம் ஐந்து அழகிய கடற்கரைப்பகுதிகளை கொண்ட கிராமங்கள் அமைந்துள்ளன. கோவிந்தா நகர், ராதா நகர், பிஜோய் நகர், ஷ்யாம் நகர் மற்றும் கிருஷ்ணா நகர் என்பவையே அவை. இந்திய நிலப்பகுதியிலிருந்து விலகி பல கிலோ மீட்டர்களுக்கப்பால் உள்ள இந்த சொர்க்க தீவுகளில் இந்தியப்பெயர்களை கேட்கும்போதே வியப்பும் பெருமையும் ஏற்படுவதையும் நம்மால் உணரமுடியும்.

மேற்சொன்னவற்றில் ராதா நகர் கடற்கரையை ‘ஆசியாவிலேயே மிகச்சிறந்த அழகான கடற்கரை’ என்று ‘டைம்’ பத்திரிகை 2004ம் ஆண்டில் பிரகடனப்படுத்தியுள்ளது. போர்ட் பிளேர் நகரத்திலிருந்து வடகிழக்கே 55 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த ஹேவ்லாக் தீவுக்கு ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை ‘ஃபெர்ரி’ சொகுசு படகுகள் இயக்கப்படுகின்றன.

இவற்றுக்கான கட்டணம் சாதாரணமாக 5 முதல் 8 அமெரிக்கன் டாலர்கள் வரை இருக்கலாம். சர்வதேச சுற்றுலாத்தள அடையாளம் உள்ளதால் இப்படி டாலர்களில் கட்டணம் குறிப்பிடப்பட்டிருப்பது தவிர்க்க முடியாததாகிறது. எனினும் இவை குறைவான கட்டணம்தான் என்பது ஒரு ஆறுதலான விஷயம். கட்டுமரப்படகு மூலமாகவும் இயற்கையை ரசித்தபடியே பயணிக்கலாம். ஆனால் இதற்கு கொஞ்சம் கூடுதலாக செலவாகும். நேரம் ரொம்பக்குறைவாக இருக்கிறதே என்பவர்களுக்காக ‘பவான் ஹான்ஸ்’ ஹெலிகாப்டர் சேவைகளும் போர்ட் பிளேரிலிருந்து ஹேவ்லாக் தீவுக்கு கிடைக்கின்றன.

ஹேவ்லாக் தீவுக்கு சென்றடைந்தபின் கால்நடையாகவே சுற்றித்திரிந்து தீவின் அழகம்சங்களையும், கடற்கரைகளையும், குடில்களையும், கடைகளையும் நிதானமாக பார்த்து ரசிப்பது நல்லது. ராதாநகர் கடற்கரைப்பகுதியில் ஸ்படிகம் போன்று மரகதப்பச்சை ஜொலிப்புடன் மின்னும் கடல்நீருக்கு அடியில் காட்சியளிக்கும் பவளப்பாறை வளர்ச்சிகளை விதவிதமான வடிவங்களில் கண்டு மகிழலாம்.

ஒரு மதிய நேரத்தை இந்த கடற்கரையில் கழித்துவிட்டு உள்ளூர் கடலுணவையும் ருசித்து முடிக்கும்போது ‘இது போதும் வாழ்க்கையில்’ என்று மனம் கிளர்ச்சியடைவதை உணரலாம். ராதா நகர் கடற்கரைக்கு அருகில் ‘எலிபேண்ட் பீச்’ என்ற மற்றொரு அழகிய கடற்கரையும் உள்ளது. நடந்தே இந்த கடற்கரைக்கு செல்ல முடியும் என்பதோடு மட்டுமல்லாமல் ராதா நகர் கடற்கரையிலிருந்து இந்த ‘எலிபேண்ட் பீச்’ கடற்கரைக்கும் நடந்து செல்லும் அனுபவம் உங்களை மேகத்தில் மிதப்பது போன்ற உவகைக்கு இழுத்து செல்லும் என்பதிலும் சந்தேகமில்லை.

அப்படி ஒரு இயற்கை ஸபரிசத்தை இந்த கடற்கரை நடைப்பயணத்தில் உங்களால் உணரமுடியும். நடக்க முடியாதவர்கள் 100 ரூபாய் கட்டணத்தில் ஆட்டோ மூலமாகவும் செல்லலாம். அது மட்டுமல்லாமல் இங்கு டாக்சி வசதிகள் மற்றும் வாடகை ஸ்கூட்டர்கள் போன்றவையும் ‘ஒரு நாள் வாடகை’க்கு குறைந்த கட்டணத்தில் (200 ரூபாய்) கிடைக்கின்றன. சுதந்திரமாக நம் விருப்பம்போல் தீவை சுற்றிவருவதற்கு இந்த வாகன வசதிகள் ஏற்றவையாக உள்ளன.

அந்தமான் தீவுகளின் சிறப்பம்சமான ‘ஸ்கூபா டைவிங்’ இந்த ஹேவ்லாக் தீவிலும் பிரதான சுற்றுலா அம்சமாக விளங்குகிறது. இருப்பினும் அதிக ஆழத்திற்கு டைவிங் செய்ய தேவைப்படும் வசதிகளான ‘ஸ்பீட் போட்’ எனப்படும் அதிவேக மோட்டார் படகுகள் மற்றும் ‘டிகம்ப்ரஷன் சேம்பர்கள்’ போன்றவை அந்தமான் தீவுகளில் இல்லை.

பொதுவாக, முதல் முறை டைவிங் செய்பவர்கள், கொஞ்சம் அனுபவம் மிக்கவர்கள் மற்றும் நிறைய அனுபவம் உள்ள சாகசவிரும்பிகள் என்று மூன்று தரப்பினருக்கான ‘ஸ்கூபா டைவிங்’ கடல் மூழ்கு பயண வசதிகள் இந்த தீவில் வழங்கப்படுகின்றன. இவை யாவுமே குறைந்த கட்டணங்களை கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்படிகத்தெளிவுடன் காட்சியளிக்கும் நீருக்கடியில் மூழ்கி விதவிதமான வண்ண மீன்கள், கடல் உயிரினங்கள், தாவரங்கள் மற்றும் வித்தியாசமான தோற்றத்துடன் அசையும் பவளப்பாறை வளர்ச்சிகள் போன்றவற்றை கண்ணுக்கருகே ரசிக்கும் அனுபவத்துக்கு ஈடு இணை எதுவுமேயில்லை என்பதை ஹேவ்லாக் தீவில் ஒரு முறை டைவிங் பயணம் மேற்கொண்டபிறகு ஒப்புக்கொள்வீர்கள்.

You Might Also Like

கணவன்மார்களே மனைவியை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்!

‘அதிரடி’ படத்தில் நடிக்க மறுத்த சஞ்சு சாம்சன்; காரணம் இதுதானாம்

நோய் தீர்க்கும் மருத்துவ குணங்கள் நிறைந்த வில்வப் பழம்

மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு… சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிப்பு

பல அற்புதமான கோயில்களை கொண்ட மகாராஷ்டிராவின் அகமதுநகர்

TAGGED:andaman islandhavelock islandNaturePleasureTouristsஅந்தமான் தீவுசுற்றுலாப்பயணிகள்மகிழ்ச்சிஹேவ்லாக் தீவு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

நதிநீர் இணைப்பு காலத்தின் கட்டாயம்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?