By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    கேனரி தீவுகளை அடைந்த அகதிகள் படகு! இரண்டு பேர் உயிரிழப்பு – உயிருக்கு ஆபத்தான நிலையில் பச்சிளம் குழந்தை!
    1 Min Read
    நைஜீரியாவில் ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்! பதிலடி நடவடிக்கையில் 48 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் அறிவிப்பு!
    1 Min Read
    செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும்! கொடிய தானியங்கி ஆயுதங்களுக்கு தடை விதிக்க போப் லியோ வலியுறுத்தல்!
    1 Min Read
    சவுதி அரேபியாவை குறிவைத்த டிரோன் தாக்குதல் முறியடிப்பு! ரியாத் வானில் பதற்றம் – ஏவுகணையும் இடைமறிப்பு!
    1 Min Read
    ரஷ்யாவில் சுதந்திர ஊடகத்திற்கு மீண்டும் நெருக்கடி! 1993 முதல் இயங்கிய நோவாயா கசெட்டா பத்திரிகை மூடல்!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பூடானில் பனிப்பாறை ஏரி உடைந்து வெள்ள அபாயம்! மேற்கு வங்கத்தில் 12 ஆயிரம் பேர் வெளியேற்றம்
    1 Min Read
    ரஷ்யா – உக்ரைன் போர் உட்பட உலகப் பிரச்சினைகளுக்கு ராணுவத் தீர்வு உதவாது! ஜி20 மாநாட்டில் ஜெய்சங்கர் அதிரடி பேச்சு!
    2 Min Read
    ரூபாயின் மதிப்புக்கு ரிசர்வ் வங்கி கொடுத்த புத்துயிர்! டாலருக்கு நிகராக ரூ.94.95 ஆக உயர்வு – 8 மாதங்களில் சிறந்த மாதாந்திர செயல்பாடு!
    2 Min Read
    வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிய மாற்றங்கள் வருமா? வங்கித்துறையைச் சீரமைக்க 5 பேர் கொண்ட உயர்மட்டக் குழு
    2 Min Read
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டாலும் மீண்டும் சேர்க்கலாம்! தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்!
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    லால்குடி நகரின் மையப்பகுதியில் 2 மதுக்கடைகள்! அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு
    2 Min Read
    திருச்சியில் 10 இடங்களில் வெள்ள அபாயம்! நிரந்தரத் தீர்வுக்கு மாஸ்டர் பிளான்
    2 Min Read
    சருமப் பிரச்சனைகளுக்கு இயற்கையான தீர்வு தரும் சந்தனம்..!
    1 Min Read
    தலை முடியில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்யும் பயனுள்ள குறிப்புகள்!!
    1 Min Read
    வங்காள விரிகுடாவில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரம்! ஆந்திராவுக்கு புயல் அபாய எச்சரிக்கை
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ரோஜா படத்தில் 60 வயதில் அறிமுகம்! 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த வத்சலா ராஜகோபால் காலமானார் – திரையுலகம் இரங்கல்!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > Uncategorized > ரோஜா படத்தில் 60 வயதில் அறிமுகம்! 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த வத்சலா ராஜகோபால் காலமானார் – திரையுலகம் இரங்கல்!
Uncategorized

ரோஜா படத்தில் 60 வயதில் அறிமுகம்! 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த வத்சலா ராஜகோபால் காலமானார் – திரையுலகம் இரங்கல்!

Nagaraj
Last updated: October 31, 2026 4:41 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

தமிழ் சினிமாவின் மூத்த நடிகையான வத்சலா ராஜகோபால் தனது 93-வது வயதில் சென்னையில் காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் 1992ஆம் ஆண்டு வெளியான ரோஜா திரைப்படத்தின் மூலம் தனது 60 வயதில் திரையுலகில் அறிமுகமானவர் வத்சலா ராஜகோபால். வயது ஒரு தடையல்ல என்பதைத் தனது திரைப்பயணத்தின் மூலம் நிரூபித்தவர். திருவனந்தபுரத்தில் பிறந்த அவர் சிறுவயதிலிருந்தே நடனம் மற்றும் நாடகங்களில் ஆர்வம் கொண்டிருந்தார். திருமணத்திற்குப் பின்னர் 1953ஆம் ஆண்டு சென்னைக்கு வந்த அவர், கணக்குத் தணிக்கை அலுவலகத்தில் பணியாற்றினார்.

அந்த அலுவலகத்தில்தான் பின்னாளில் புகழ்பெற்ற இயக்குநரான கே.பாலச்சந்தர் மூத்த அதிகாரியாகப் பணியாற்றியதாகவும் அவர் தனது பழைய பேட்டியில் நினைவுகூர்ந்துள்ளார்.

நாடகத் துறையில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வந்த அவர், ரசிக்க ரங்கா என்ற நாடகக் குழுவில் இணைந்து பல மேடை நாடகங்களில் நடித்தார். அவரது நடிப்புத் திறமையைப் பார்த்து இயக்குநர் மணிரத்னம் ரோஜா படத்தில் வாய்ப்பு வழங்கினார்.

அந்தப் படத்தில் மதுபாலாவின் பாட்டி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். பின்னர் தமிழ் திரைப்பட உலகில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டார்.

சதி லீலாவதி படத்தில் அம்புஜம் மாமி கதாபாத்திரம், அந்நியன், மொழி, ரிதம், வின்னர், பட்டியல், தாம் தூம், கல்யாண சமையல் சாதம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தொலைக்காட்சித் தொடர்களிலும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். சித்தி, ஆனந்தம், முந்தானை முடிச்சு, வசந்தம் உள்ளிட்ட தொடர்களில் அவரது நடிப்பு ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.

பாலுமகேந்திராவின் கதை நேரம் தொலைக்காட்சித் தொடரிலும் அவர் பங்கேற்றுள்ளார். திரைப்படங்களில் பெரும்பாலும் பாட்டி கதாபாத்திரங்களில் தோன்றினாலும், நகைச்சுவை, உணர்ச்சி, குடும்பப் பாசம் ஆகியவற்றை இயல்பாக வெளிப்படுத்தும் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர்.

வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக அவர் காலமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 60 வயதில் தொடங்கிய அவரது திரைப்பயணம் பல தலைமுறை ரசிகர்களின் நினைவுகளில் என்றும் நிலைத்திருக்கும்.

 

You Might Also Like

சூர்யா 49-வது படத்தை இயக்குகிறாரா மண்டாடி இயக்குநர் மதிமாறன்? கடலோர பின்னணியில் பிரம்மாண்ட ஆக்‌ஷன் கதை

ஒரு நாளில் 300 தொலைபேசி அழைப்புகள்! பட வாய்ப்புகளைத் தவறவிட்டதாக எழுந்த புகார் – நடிகர் ரிஷிகாந்த் விளக்கம்!

பிரேம்ஜி – போஸ் வெங்கட் இணையும் புதிய கிரைம் திரில்லர்! இதுவரை பார்க்காத கதாபாத்திரத்தில் பிரேம்ஜி – படப்பிடிப்பு தொடக்கம்!

பொங்கலுக்கு வேட்டுவம் வருவது உறுதி! பா.ரஞ்சித் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு – ஆர்யா ரசிகர்கள் உற்சாகம்!

ரூ.800 கோடியை நெருங்கும் ஜெயிலர் 2! இந்தியாவில் ரூ.509 கோடி வசூல் – மூன்றாவது வாரத்திலும் ரஜினியின் அதிரடி!

TAGGED:CinemaTributeKollywoodmaniratnamRojatamilactressVatsalaRajagopalதமிழ் திரையுலகம்திரையுலக இரங்கல்மணிரத்னம்மூத்த நடிகைரோஜாவத்சலா ராஜகோபால்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

இந்தியா

வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிய மாற்றங்கள் வருமா? வங்கித்துறையைச் சீரமைக்க 5 பேர் கொண்ட உயர்மட்டக் குழு

By Nagaraj 2 Min Read

75 ஆண்டுகளில் இல்லாத குளிர்! கனமழையால் நடுங்கிய டெல்லி – அக்டோபர் மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலை 20.7 டிகிரியாகச் சரிவு

By Nagaraj
இந்தியா

ரூபாயின் மதிப்புக்கு ரிசர்வ் வங்கி கொடுத்த புத்துயிர்! டாலருக்கு நிகராக ரூ.94.95 ஆக உயர்வு – 8 மாதங்களில் சிறந்த மாதாந்திர செயல்பாடு!

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
இந்தியா

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டாலும் மீண்டும் சேர்க்கலாம்! தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்!

வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் (SIR) நிறைவடைந்துவிட்டதால், அதில் விடுபட்டவர்களின் பெயர்களை மீண்டும் சேர்க்க முடியாது என்று கருதக்கூடாது…

By Nagaraj
இந்தியா

பத்ரிநாத் யாத்திரையில் கோர விபத்து! மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது – விமானி உட்பட 6 பேர் பலி!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத் புனிதத் தலத்திலிருந்து பக்தர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட தனியார் ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியதில் விமானி உட்பட ஆறு…

By Nagaraj
இந்தியா

ஆந்திராவுக்கு ரூ.4,600 கோடி இழப்பு! அர்னாப் புயலால் 8,000 மின்கம்பங்கள் சாய்ந்தன – விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க முதல்வர் உறுதி!

அர்னாப் புயலின் தாக்கத்தால் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட சேதங்களின் மதிப்பு ரூ.4,600 கோடியாக இருக்கும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு…

By Nagaraj
இந்தியா

ஒடிசாவை புரட்டிப்போட்ட அர்னாப் புயல்! நிலச்சரிவில் 9 மாதக் குழந்தை உட்பட 3 பேர் பலி

அர்னாப் புயலைத் தொடர்ந்து பெய்த கனமழையால் ஒடிசா மாநிலத்தின் தெற்குப் பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி 9 மாதக்…

By Nagaraj
இந்தியா

இந்தியாவின் சொந்த ஜிபிஎஸ் தொழில்நுட்பத்திற்கு புதிய பலம்! நள்ளிரவில் விண்ணில் பாய்ந்த ஜிஎஸ்எல்வி 

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி-எப்18 ராக்கெட் மூலம் என்.வி.எஸ்.03 என்ற…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?