May 6, 2024

அம்ரித்பால் சிங் தனது உறவினர் வீட்டில் இருந்து கோட், சூட் மற்றும் கூலிங் கிளாஸ்களுடன் தப்பிச் சென்றார்

புதுடெல்லி: பஞ்சாப் போலீசாரால் தேடப்பட்டு வரும் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங், அமிர்தசரஸில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து கடந்த 20ம் தேதி மாறுவேடத்தில் கோட், சூட், கூலிங் கிளாஸ் அணிந்து தப்பியது சிசிடிவி கேமராவில் பதிவானது.

வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பின் தலைவராக உள்ள அம்ரித்பால் சிங், தனது ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பிரிவினைவாத நடவடிக்கைகளிலும் வன்முறையிலும் ஈடுபட்டார். ஏராளமான போலீசார் காயமடைந்தனர். அவரை கைது செய்ய போலீசார் துரத்தியபோது, உடைகள் மற்றும் வாகனங்களை மாற்றிக்கொண்டு மாறுவேடத்தில் தப்பினார். அவரை கடந்த ஒரு வாரமாக போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், அமிர்தசரஸில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த அம்ரித்பால் சிங், கடந்த 20ம் தேதி கோட், சூட், கூல் கிளாஸ் அணிந்து தப்பியது அங்குள்ள சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவாகியுள்ளது. அவர் அமிர்தசரஸில் இருந்து ஹரியானாவில் உள்ள குருஷேத்திரத்திற்கு தப்பிச் சென்றார். முகத்தை மறைக்கக் குடையையும் கையில் ஏந்தியிருப்பார்.

ஹரியானாவில் உள்ள குருஷேத்ராவில் அம்ரித்பால் சிங் மற்றும் அவரது உதவியாளர் பாபல்பிரீத் சிங் ஆகியோருக்கு பால்ஜீத் கவுர் என்ற பெண் அடைக்கலம் அளித்தார். அவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஹரியானாவில் இருந்து டெல்லி சென்றுள்ளார். நேற்று முன்தினம் பஸ் நிலையத்தில் துறவியாக காட்சியளித்தார். டெல்லி காஷ்மீரி கேட் பஸ் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை டெல்லி மற்றும் பஞ்சாப் போலீசார் நேற்று ஆய்வு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!