May 6, 2024

டென்ஷனால் ஏற்படும் தொந்தரவுகள்..

* தலைவலி, ரத்த அழுத்தம், அஜீரணம் மற்றும் இதர வயிற்று பிரச்சினைகள், மனக்குழப்பம் போன்றவை ஏற்படும். * டென்ஷனும், கோபமும் எப்போதும் சேர்ந்தே வரும். இரண்டும் சேர்ந்து வாழ்க்கையை குழப்பத்தின் எல்லைக்கு கொண்டுபோய், நிம்மதிக்கு உலைவைத்துவிடும். * டென்ஷன் இன்றி வாழ விரும்புகிறவர்கள் முதலில் எதிர்மறையான எண்ணங்கள், பயத்தில் இருந்து அகன்று, எதையும் பாசிட்டிவ்வாக சிந்திக்கவேண்டும்.

* பள்ளி, கல்லூரி, வீடு, அலுவலகம் எங்கே என்றாலும் உங்கள் வேலைகளை திட்டமிட்டு செய்யுங்கள். மனதை ஒருநிலைப்படுத்த தியானம் மேற்கொள்ளுங்கள். * காலையில் எழுந்ததும் கண்ணாடி முன்பு நின்று கொண்டு ‘இன்று முழுவதும் நான் அமைதியாக செயல்படுவேன்’ என்று திரும்பத் திரும்ப கூறி, அதை உங்கள் ஆழ்மனதில் பதிவு செய்யுங்கள்.

* அடுத்தவர்களின் பிரச்சினைகளில் போய் உங்கள் மூக்கை நுழைக்காதீர்கள். மற்றவர்களை குறை சொல்வதையும் தவிர்த்திடுங்கள். மற்றவர்களை நீங்கள் புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டாலே, உங்கள் டென்ஷனில் பாதி குறைந்துவிடும். * நீங்கள் எளிதில் டென்ஷன் ஆகிவிடக்கூடியவராக இருந்தால், உங்களுக்கு எதிரிகள் அதிகமாகிவிடுவார்கள்.

தேவையற்ற வார்த்தைகளை பேசி, உங்கள் அருகில் இருப்பவர்களையே உங்களுக்கு எதிரியாக்கிவிடுவீர்கள். * பதற்றம் உங்கள் இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்து ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி, மூளை நரம்புகளை பாதித்து உங்கள் இயக்கத்திற்கே தடை போட்டுவிடும். நாளடைவில் இது பக்கவாதமாக மாறும்தன்மை கொண்டது. * டென்ஷன் ஏற்படும்போது கண்களை மூடி மூச்சை இழுத்து விடுங்கள். இவ்வாறு தொடர்ந்து சில முறை செய்தால் டென்ஷன் குறையும். இதன் மூலம் நீங்கள் இயல்பு நிலைக்கு வரலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!