May 6, 2024

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் அரையிறுதியில் சாட்விக், சிராக் ஜோடி

பேசல்: சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதிக்கு இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ரங்கிரிட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி நுழைந்தது.

சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரிட்டி மற்றும் ஷிராக் ஷெட்டி ஜோடி டென்மார்க்கின் ஜெப்பே பே மற்றும் லாஸ்ஸே மோல்ஹெட் ஜோடியை எதிர்த்து விளையாடியது.

54 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரிட்டி மற்றும் ஷிராக் ஷெட்டி ஜோடி 15-21, 21-11, 21-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. அரையிறுதியில் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி மலேசியாவின் ஆங் எவ் சின் மற்றும் தியோ யீ ஜோடியை எதிர்கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!