May 5, 2024

முடி உதிர்வு பிரச்சனையை தீர்க்க உதவும் ஹேர் பேக்

சென்னை: பொதுவாக எல்லோருக்கும் முடி உதிர்வு பிரச்சனை தான் பெரும் பிரச்சனையாக இருக்கிறது. இதற்கு என்ன தான் தீர்வு, என்ன தான் செய்வது என்று ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி அதிகமாக புலம்புகிறார்கள். அதிலும் சிலர் முடி வளரவில்லை என்றாலும் கூட பரவாயில்லை ஆனால் முடி உதிர்வு மட்டும் இல்லாமல் இருக்க வேண்டும் என்றும் நினைக்கிறார்கள்.

ஒரு கட்டத்திற்கு மேல் நமக்கு முடி உதிர்வு பிரச்சினை அதிகமாக இருக்கும் போது கடைகளில் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டுள்ள பொருட்களை வாங்கி நாம் உபயோகப்படுத்துகின்றோம். ஆனால் இதுமாதிரி நாம் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்களை அதிகமாக பயன்படுத்துவதன் மூலமாக முடி உதிர்வு பிரச்சினை அதிகரிக்குமே தவிர ஒரு போதும் குறையாது.

அதனால் இன்று முடி பிரச்சினைக்கு நிரந்தரமாக ஒரு தீர்வினை அளிக்கக்கூடிய ஒரு ஹேர் பேக் பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

தினமும் நாம் உண்ணும் உணவானது ஊட்டச்சத்து மிகுந்த உணவாக இல்லை என்றால் அதன் விளைவாக முதலில் முடி உதிர்வு பிரச்சினை தான் ஏற்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் மன அழுத்தம், மரபணு பரிமாற்றம் மற்றும் ஒழுங்கற்ற தலை முடி பராமரிப்பு இதுபோன்ற காரணங்கள் தான் தலை முடி உதிர்வு பிரச்சினைக்கு வழிவகுக்கிறது.

தேவையான பொருட்கள்:

தேங்காய்- 1 மூடி
வெந்தயம்- 3 ஸ்பூன்
முட்டை- 1
காட்டன் துணி- சிறிதளவு

செய்முறை: வெந்தயத்தில் உள்ள சத்துக்கள் முடிக்கு பலவிதமான பலன்களை அளிக்கக்கூடியதாக இருக்கிறது. அதனால் 3 ஸ்பூன் வெந்தயத்தை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்துக்கொள்ளுங்கள். மறுநாள் காலையில் 1 மூடி தேங்காயினை துருவி அதை மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக தேங்காய் பால் பிழிந்து எடுத்துக்கொள்ளுங்கள்.

இப்போது மிக்சி ஜாரில் ஊற வைத்துள்ள வெந்தயம் மற்றும் எடுத்துவைத்துள்ள தேங்காய் பால் இவை இரண்டையும் நன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்து விடுங்கள். அதன்பிறகு ஒரு காட்டன் துணியில் அரைத்துள்ள பேஸ்ட்டினை சேர்த்து சுத்தமாக வடிகட்டி பிழிந்து ஒரு பவுலில் வைத்துக் கொள்ளுங்கள்.

கடைசியாக பவுலில் உள்ள பேஸ்ட்டுடன் 1 முட்டையின் வெள்ளை கருவினை மட்டும் சேர்த்து 2 நிமிடம் வரை கலந்து கொள்ளுங்கள். இப்போது முடி உதிர்வு பிரச்சினைக்கு முற்று புள்ளி வைக்கக்கூடிய ஹேர் பேக் தயார்.

இப்போது தலையில்வழக்கமாக பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயினை அப்ளை செய்து விட்டு பின்னர் தயார் செய்து வைத்துள்ள ஹேர் பேக்கினை தலை முடியின் உச்சி முதல் வேர் வரை அப்ளை செய்ய வேண்டும்.

அதன்பிறகு 20 நிமிடம் கழித்து வழக்கமாக பயன்படுத்தும் சீயக்காய் கொண்டு தலை முடியினை அலசி விட வேண்டும். இந்த ஹேர் பேக்கினை அப்ளை செய்வதன் மூலம் முடி உதிர்வு பிரச்சினை என்பது இருக்காது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!