May 12, 2024

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் நேரடி அறிவிப்புகள்: காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுகிறது

கர்நாடக மாநிலத்தில் கடந்த 10ம் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. பெங்களூருவில் உள்ள 28 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 6 மையங்களிலும், மற்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மாநிலத்தில் 30 எண்ணும் மையங்களிலும் நடைபெற்று வருகிறது.

மாநிலம் முழுவதும் மொத்தம் 36 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகள் மதியம் 2 மணிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்குப்பதிவின் போது 73.19 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், இன்றைய வாக்கு எண்ணிக்கை முடிவில் கர்நாடகாவில் யார் ஆட்சியைப் பிடிப்பது என்பது தெரியவரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!