அமெரிக்கா: அமெரிக்கா செல்ல விசா கேட்டு விண்ணப்பிக்கும் மைனர் குழந்தைகளையும் இனி திட்டமிடப்பட்ட தூதரக நேர்காணலுக்கு நேரில் அழைத்து வர வேண்டும் என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இதன்படி கைக்குழந்தையாக இருந்தாலும், 17 வயதுடைய சிறுவன் அல்லது சிறுமியாக இருந்தாலும், விசா நேர்காணலுக்காக குழந்தையை நேரில் அழைத்து வர வேண்டும் என பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விசா நடைமுறையில் தூதரக நேர்காணல் முக்கிய பங்கு வகிப்பதாகவும், விண்ணப்பதாரர்களை மதிப்பீடு செய்வதுடன் எல்லைப் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இது உதவுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட வயதுக்குட்பட்ட குழந்தைகள் நேர்காணலுக்கு நேரில் வரத் தேவையில்லை என்ற பழைய நடைமுறையை பெற்றோர் கருதக்கூடாது என்றும், விண்ணப்பதாரர்கள் அனைவரும் தூதரக அதிகாரி நேரில் பார்க்கும் வகையில் நேர்காணலுக்கு வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
