மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை பணியாளர்களுக்கு 2026-ம் ஆண்டுக்கான காந்தியடிகள் காவலர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. சாய்பிரணீத், திருச்சி மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் ராமன், விக்கிரவாண்டி காவல் உதவியாளர் க.சண்முகம், திருப்பாதிரிபுலியூர் தலைமைக் காவலர் எ.கருணாகரன், கள்ளக்குறிச்சி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு தலைமைக் காவலர் பெ.செல்வம் ஆகிய 5 பேர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விருது 2027-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி குடியரசு தின விழாவில் முதலமைச்சர் விஜய் வழங்குவார். விருதுடன் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.40 ஆயிரம் பரிசுத்தொகையும் வழங்கப்பட உள்ளது.
காவல்துறையில் மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்படுவோருக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
