ஈரானின் வெளிநாட்டு வர்த்தக நடவடிக்கைகளுக்கு உதவி செய்து வந்த நிழல் வங்கி வலையமைப்புகளை குறிவைத்து அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி, ஹாங்காங் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் நிறுவனங்கள் மற்றும் நபர்கள் இந்த நடவடிக்கையில் குறிவைக்கப்பட்டுள்ளனர்.
ஈரானின் வெளிநாட்டு வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்கு உதவி செய்து வந்த 24 பரிவர்த்தனை நிறுவனங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மீது அமெரிக்க நிதித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
ஈரானின் நிதி நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கும், அமெரிக்காவின் தடைகளை மீறி நடைபெறும் வர்த்தகத்தை முடக்குவதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையால் ஈரானின் சர்வதேச வர்த்தக நடவடிக்கைகள் மேலும் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
