மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்க கத்தார் நாடு மீண்டும் தூதரக முயற்சிகளில் இறங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்துள்ளனர். பிராந்திய பாதுகாப்பு, கடல்வழிப் போக்குவரத்து சுதந்திரம் மற்றும் எரிசக்தி விநியோகத்தைப் பாதுகாப்பது ஆகியவை முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன.
எகிப்து வெளியுறவுத்துறை அமைச்சரும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் பேசி, தூதரக ரீதியான தீர்வுக்கு ஒத்துழைக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
