மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு பதிலடியாக உக்ரைன், ரஷ்யா மீது 600-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது.
ரஷ்யா–உக்ரைன் போர் 4 ஆண்டுகளை கடந்து தொடர்ந்து வரும் நிலையில், இரு நாடுகளும் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன. ரஷ்யா நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்ததுடன், ஏராளமானோர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே உக்ரைன், ரஷ்யா மீது அலை அலையாக 600-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலை மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் உறுதிப்படுத்தியுள்ளார். ட்ரோன் தாக்குதலால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து முழுமையான தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.
