பாரிஸ்: பிரான்ஸ் என்று உள்ள இந்திய வெளியுறவு துறை மந்திரி அந்நாட்டு அதிபர் இம்மானுவேலை சந்தித்து பேசினார்.
இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஐரோப்பிய நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிவிக்க அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்று பிரான்ஸ் சென்றார். அவர் அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்தார். இதனை தொடர்ந்து இன்று அவர் பிரான்ஸ் வெளியுறவுத்துறை மந்திரி ஜீன் நியல் பெரொட்டை சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, இந்தியா-பிரான்ஸ் உறவு, வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து வெளியுறவுத்துறை மந்திரிகள் ஆலோசனை நடத்தினர்.