By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அது டாக்டர் வேடம்… சர்ச்சைக்கு பின் பூசி மெழுகிய டிரம்ப்
    1 Min Read
    331 குழந்தைகளுக்கு ஹெச்.ஐ.வி. தொற்று உறுதி: பாகிஸ்தானில் அதிர்ச்சி
    2 Min Read
    சுற்றுலா பயணிகளை அதிக அளவு ஈர்க்கும் ஒளிரும் கடல்!
    1 Min Read
    இந்திய பயணத்தை ஆவலுடன் மார்கோ ரூபியா எதிர்நோக்கியுள்ளாராம்
    1 Min Read
    டிரோன் தாக்குதல் நடத்தியதாக ஈரான் மீது குவைத் குற்றச்சாட்டால் பரபரப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பாடகி ஆஷா போஸ்லே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
    1 Min Read
    யமுனை நதியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 10 யாத்திரிகர்கள் பலி
    1 Min Read
    சிறப்பு தகுதிகளுடன் கூடிய 4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு ஒப்புதல்
    2 Min Read
    3 மாநில தேர்தல்… விறுவிறுப்பாக நடந்து வரும் வாக்குப்பதிவு
    2 Min Read
    சிறுமியை கட்டி வைத்து தாக்கிய மாஜி ராணுவ வீரரால் பரபரப்பு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தஞ்சை வளர்ச்சிக்கு புதிய சிறகு: விமான நிலையம் விரைவில்: திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் உறுதி
    4 Min Read
    கீரைகள் கலந்த மூலிகை சூப் தயாரிக்கும் முறை
    1 Min Read
    வளரும் குழந்தைக்கு அளிக்க வேண்டிய சத்தான உணவுகள்
    1 Min Read
    குழந்தைகள் அதிக உடல் எடை கூடுவதற்கு என்ன காரணம்
    1 Min Read
    தங்க நகைகளை எப்போதும் புதிது போல் பராமரிக்க டிப்ஸ்
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: இந்தியாவுக்கு வாருங்கள்… தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > உலகம் > இந்தியாவுக்கு வாருங்கள்… தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
உலகம்

இந்தியாவுக்கு வாருங்கள்… தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

Nagaraj
Last updated: August 30, 2025 5:57 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

டோக்கியோ: தொழில்கள் தொடங்க இந்தியாவுக்கு வாருங்கள் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையே 15-வது உச்சி மாநாடு இன்று பிற்பகல் ஜப்பானில் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று இரவு டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார்.

இன்று அதிகாலை அவரது விமானம் டோக்கியோ சென்று அடைந்தது. விமான நிலையத்தில் ஜப்பான் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் இந்தியவாழ் ஜப்பான் மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

டோக்கியோ விமான நிலையத்தில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. அதை கண்டுகளித்த பிறகு பிரதமர் மோடி தனது 2 நாள் ஜப்பான் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

டோக்கியோவில் வந்து இறங்கினேன். இந்தியாவும், ஜப்பானும் தங்களது உறவுகளை வலுப்படுத்தி வரும் நிலையில் இந்தப் பயணத்தின்போது பிரதமர் இஷிபா மற்றும் பிற தலைவர்கள் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை நான் எதிர் நோக்குகிறேன். மேலும் உறவை வலுப்படுத்தவும் இந்த பயணம் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இவ்வாறு அதில் பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

விமான நிலைய வரவேற்புக்கு பிறகு பிரதமர் மோடி இந்திய ஜப்பான் தொழில் அதிபர்கள் பங்கேற்ற இந்தியா-ஜப்பான் கூட்டு பொருளாதார மன்ற கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தொழில் அதிபர்களுடன் பிரதமர் மோடி உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-

இன்று இந்தியா அரசியலில் நிலைத்த தன்மையுடன் உள்ளது. பொருளாதாரத்தில் நிலையான தன்மையுடன் உள்ளது. கொள்கைகளில் வெளிப்படை தன்மை உருவாக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டுமல்ல உலகளவில் பொருளாதாரத்தில் மிகமிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா திகழ்கிறது.

மிக விரைவில் இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறப் போகிறது. ஜப்பானின் தொழில்நுட்பமும் இந்தியாவின் திறமையான இளைஞர்களும் இணைந்து பணியாற்றும்போது இந்த நூற்றாண்டில் மிகப்பெரிய தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்த முடியும்.

ஜப்பானின் தொழில் மேம்பாடுகளை உலகம் முழுக்க கொண்டு செல்லும் சக்தியாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவும், ஜப்பானும் ஒருங்கிணைந்து எதிர்காலத்தில் நிலையான, வளர்ந்த, செல்வசெழிப்பு மிக்க ஆசிய நூற்றாண்டை வடிவமைக்கும்.

இந்தியாவும், ஜப்பானும் வெற்றிகரமாக ரோபாடிக்ஸ், செமி கண்டக்டர்ஸ், கப்பல் கட்டுதல் மற்றும் அணுசக்தி ஆகிய துறைகளில் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இதன் மூலம் உலகம் முழுவதும் குறிப்பாக ஆப்பிரிக்காவில் மிகப்பெரிய வளர்ச்சிக்கு இந்தியாவும், ஜப்பானும் முக்கிய பங்காற்ற முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

You Might Also Like

மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவால் பாதகம் ஏற்படாது… பிரதமர் மோடி உறுதிமொழி

அது டாக்டர் வேடம்… சர்ச்சைக்கு பின் பூசி மெழுகிய டிரம்ப்

331 குழந்தைகளுக்கு ஹெச்.ஐ.வி. தொற்று உறுதி: பாகிஸ்தானில் அதிர்ச்சி

பாடகி ஆஷா போஸ்லே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

மக்களிடம் மகிழ்ச்சியை காண்கிறேன்… முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

TAGGED:Huge DevelopmentJapanNuclear Energy SectorPrime Minister ModiVictoryஅணுசக்தி துறைபிரதமர் மோடிமிகப்பெரிய வளர்ச்சிவெற்றிகரம்ஜப்பான்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்தமிழகம்

தஞ்சை வளர்ச்சிக்கு புதிய சிறகு: விமான நிலையம் விரைவில்: திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் உறுதி

By Nagaraj 4 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?