சிங்கப்பூர்: மக்கள் தொகை உயர்வு… சிங்கப்பூர் நாட்டின் மக்கள் தொகை 60 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், மக்கள் தொகை உயர்வு 2 சதவீதம் உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிக்யைில் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர், சிறு நகரம் மட்டுமே. மலாய், தமிழ், சீனம், ஆங்கிலம் ஆகியவை பேசக்கூடிய மக்கள் வசிக்கின்றனர்.நாட்டின் மொத்த மக்கள் தொகை 734 சதுர கிலோமீட்டர். இங்கு வசிக்கும் மக்கள் தொகை பற்றிய புள்ளி விபரத்தை அந்நாட்டு பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்டது.
அதன்படி 2024 ஜூன் மாதத்தில் சிங்கப்பூரில் 60 லட்சம் பேர் வசிக்கின்றனர். இதில் சிங்கப்பூர் வாழ் குடியுரிமை பெற்றவர்கள், 41 லட்சம் பேர். சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு பணியாளர்கள், சர்வதேச மாணவர்கள் ஆகியோர் உள்ளிட்டவர்கள் 18 லட்சத்து 60 ஆயிரம் பேர்.
குடியுரிமை இல்லாதவர்கள் மட்டும் 5 சதவீதம் பேர் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வரும் 2030ம் ஆண்டில் சிங்கப்பூர் மொத்த மக்கள் தொகை, 69 லட்சமாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.