சர்க்கரை அல்லது உப்பு கொண்ட தயிர்: தயிர் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால் தயிருடன் உப்பு அல்லது சர்க்கரை ஆகிய இரண்டில் எது ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும் தெரியுமா? நாம் அனைவரும் தயிரை விரும்புகிறோம். தயிரில் நமது உடலுக்குத் தேவையான புரதம், கால்சியம், போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. பொதுவாக, பெரும்பாலான மக்கள் கோடையில் தயிர் சாப்பிட விரும்புகிறார்கள். காரணம், உடல் சூட்டை குறைத்து ஆரோக்கியமாக வைத்திருக்கும். ஆனால், கோடை, குளிர்காலம் என எந்த காலகட்டத்திலும் தயிர் உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை என்கின்றனர் நிபுணர்கள்.
இந்நிலையில் சிலர் தயிரில் சர்க்கரை கலந்தும், சிலர் உப்பு சேர்த்தும் சாப்பிடுவார்கள். ஆனால் இரண்டில் எது சிறந்தது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், இந்தக் கட்டுரை உங்களுக்கானது. ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு ரசனைகள் இருக்கும். ஆனால், உடல்நிலை விஷயத்தில் தனி கவனம் செலுத்துவது நல்லது. எனவே தாமதமின்றி இந்த கட்டுரையில் தயிர் மற்றும் சர்க்கரை அல்லது உப்பு ஆகியவற்றில் எது சிறந்தது என்று பார்ப்போம்.
தயிர் மற்றும் உப்பு:
நீங்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த இரண்டையும் சேர்த்து சாப்பிடுவது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில் உப்பு பல பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் தயிருடன் சேர்த்து சாப்பிட்டால், தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை பெருமளவு அழிக்கிறது. மேலும், அதிக உப்பு சேர்க்கப்பட்ட தயிர் சாப்பிடுவது உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். எனவே உப்பு சேர்த்து சாப்பிடுவது நல்லதல்ல.
தயிர் மற்றும் சர்க்கரை:
சர்க்கரையுடன் தயிர் சாப்பிடுவது செரிமான அமைப்புக்கு மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் சர்க்கரை தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அழிக்காது மேலும் வயிற்றில் எரியும் உணர்வை தணிக்கிறது. அதுமட்டுமின்றி, இவை இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால், உடல் எடை வேகமாக அதிகரிக்கும். ஏனெனில், இது அதிக கலோரி உள்ளடக்கம் நிறைந்ததாக மாறிவிடும். முக்கியமாக, நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், தயிருடன் உப்பு சேர்த்து சாப்பிடக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தயிர் சாப்பிட சிறந்த வழி எது?
தயிரில் சிறிது உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் இல்லை ஆனால் நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்களுக்கு இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால் அல்லது நீங்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டிருந்தால், அது உங்களுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, இந்த விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். அத்தகைய சூழ்நிலையில், உப்புக்கு பதிலாக சர்க்கரை சேர்ப்பதே சிறந்த வழி என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.