‘புஷ்பா 2’ படத்திற்குப் பிறகு, அல்லு அர்ஜுனின் படத்தை அட்லீ இயக்குவார். இதை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. “இது சர்வதேச தரத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘பேன்-வேர்ல்ட்’ படமாக இருக்கும். இந்திய சினிமாவில் இதற்கு முன் கண்டிராத அளவில் இது தயாராகி வருகிறது,” என்று படக்குழு கூறியிருந்தது. படத்தின் கருத்துரு புகைப்பட படப்பிடிப்பு கடந்த மாதம் மும்பையின் பாந்த்ராவில் உள்ள மெகாபூப் ஸ்டுடியோவில் நடைபெற்றது. படப்பிடிப்பு ஜூன் மாத இறுதியில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் அல்லு அர்ஜுன், “ஜவான் மற்றும் தென்னிந்தியாவில் சில வெற்றிகரமான படங்களை இயக்கிய அட்லியுடன் நான் கைகோர்க்கிறேன். அவர் கொடுத்த யோசனையும் அவரது நம்பிக்கையும் எனக்குப் பிடித்திருந்தது. நாங்கள் பல நிலைகளில் ஒரே மனநிலையில் இருக்கிறோம். இந்தப் படம் இந்திய சினிமாவுக்கு ஒரு புதிய காட்சி விருந்தை அளிக்கும் என்று நான் நம்புகிறேன்.

இது இந்திய உணர்வுகளைக் கொண்ட ஒரு சர்வதேச படமாக இருக்கும். விளம்பரம் ஹாலிவுட், கொரிய, சீன, ஈரானிய படங்கள் போன்ற அனைத்து திரைப்படத் துறைகளும் உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் இவ்வளவு பெரிய சினிமா துறையைக் கொண்ட இந்தியா, சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதற்கான சரியான நேரம் இது என்று நான் நினைக்கிறேன். அந்த நிலையை எட்டும் நாடாக இந்தியா வளர்ந்து வருகிறது. வரும் ஆண்டுகளில், இந்திய திரைப்படத் துறை உலகளவில் ஒரு முத்திரையைப் பதிக்கும்.”