விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமான ஜனநாயகன் தற்போது தமிழ் திரையுலகின் மிகுந்த எதிர்பார்ப்பு கொண்ட படமாக மாறியுள்ளது. சமீபத்தில் வெளியான கிலிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விஜயின் ஸ்டைலிஷ் லுக் மற்றும் அனிருத் வழங்கிய மிரட்டலான பின்னணி இசை அந்த வீடியோவின் முக்கிய ஆக்கமாக இருந்தது. விஜய் போலீசாக நடித்திருப்பதும் இந்த வீடியோ மூலம் உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் வெளியாகும் புதிய தகவலின்படி, இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அனிருத் ஒரு எமோஷனல் சர்ப்ரைஸ் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. படம் முடியும் தருணத்தில் விஜய் மற்றும் அவரது ரசிகர்களுக்காக ஒரு சிறப்பு பாடல் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த பாடலை அனிருத் முழுக்க விஜய்க்காகவும், அவரை ஒத்துழைத்த ரசிகர்களுக்காகவும் உருவாக்கியிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த பாடல் உண்மையாக இருந்தால், அது ஒரு மனதைக் கவரும் தருணமாகவும், விஜய் ரசிகர்களுக்கான உணர்ச்சி மிகுந்த காணொளியாகவும் அமையும். தற்போதைக்கு இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், இந்த செய்தி ரசிகர்களை பெரும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.
விஜய் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்திருக்கும் நிலையில், அவருடைய கடைசி படத்தில் இப்படிப்பட்ட சபர்பைஸ் இடம்பெறுவது, அவரது பயணத்திற்கு ஒரு முடிவாக அமைந்திருக்கலாம். கடந்த 30 வருடங்களாக தமிழ் சினிமாவுக்குச் செய்த சேவைக்கு இது ஒரு நல்ல மரியாதையாக பார்க்கப்படுகிறது.
ஜனநாயகன் திரைப்படம் 2025 ஜனவரி 9ஆம் தேதி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்படவுள்ளது. இதே தேதியில் பராசக்தி போன்ற மற்ற படங்கள் வெளிவராது என்பது தற்போது தெரிகிறது. எனவே ஜனநாயகன் சோலோ ரிலீஸாகும் வாய்ப்பு அதிகம்.
சோலோ ரிலீஸாகும் பட்சத்தில், இப்படம் வசூல் சாதனைகளை முறியடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. விஜய் ரசிகர்கள் இப்படத்தை திரையில் பலமுறை பார்ப்பார்கள். ஒரு நடிகரின் கடைசி படம் என்பதால், விமர்சனங்களை தாண்டி இப்படம் வெற்றியை கட்டாயமாக அடையும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.