சென்னை: முழுமையான இறை வழிபாட்டின் மூலம் தான் நம்முடைய வாழ்க்கை முழுமை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. நம்முடைய வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க வேண்டும் என்றாலும், சின்ன சின்ன பிரச்சனைகள் கூட பூதாகரமாக வெடிக்க கூடாது என்றாலும், சில ஆன்மீக குறிப்புகளை நாம் பின்பற்ற வேண்டும்.
அதன் அடிப்படையில், நம்முடைய வீட்டில் கடைபிடிக்க வேண்டிய சின்ன சின்ன ஆன்மீக குறிப்புகள் என்னென்ன என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
உங்களால் இந்த குறிப்புகளை எல்லாம், பின்பற்ற முடியவில்லை என்றாலும், முடிந்தவரை உங்களுடைய பிரச்சனை தீர்வதற்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்து பயனடையலாம். முதலில் உங்கள் வீட்டு நில வாசப்படியில் வேப்பிலையோ அல்லது மா இலையோ கட்டாயம் கட்டியிருக்க வேண்டும். ஒரு வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு வாரத்திற்கு ஒரு முறையோ அந்த இலைகளை மாற்றினால் போதும்.
இவைகளை தினம்தோறும் கொண்டுவந்து புதியதாக வைக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. இதோடு சேர்த்து உங்கள் வீட்டின் நலனிற்காக, ஒரு வெள்ளருக்கன் கட்டையை எடுத்துவந்து, சுத்தமாக மஞ்சள் தண்ணீரில் கழுவி, அந்த கட்டையின் மேல், மஞ்சள் பூசி ஒரு குங்குமப் பொட்டு வைத்து, ஒரு சிகப்பு கயிறு கட்டி உங்கள் நிலவாசல் படியில் தொங்கவிடுவது வீட்டிற்கு மிகவும் நல்லது.
தினம்தோறும் ஊதுபத்தி காண்பிக்கும் போது இந்தக் கட்டைக்கும் காண்பித்து விடுங்கள். இப்படி செய்யும்பட்சத்தில் உங்கள் வீடு ஒரு பாதுகாப்பு வட்டத்திற்குள் வந்துவிடும். நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போதும், வீட்டிற்கு உள்ளே வரும்போதும், நில வாசல் படியின் மேல் கால் வைத்து மிதித்து போகக்கூடாது. எப்போதுமே நில வாசல் படியை தாண்டி தான் செல்ல வேண்டும்