மதுரை: மதுரை அருகே உணவகத்துக்குள் புகுந்து பெண்களைத் தாக்கிய மதுபோதை கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உணவகத்துக்குள் புகுந்த ஒரு கும்பல், அங்கிருந்த பெண்களையும் இளைஞர்களையும் சரமாரியாகத் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
நர்மதா என்பவர் நடத்தி வரும் அந்த உணவகத்தில் பணியாற்றும் சரவணன் என்பவருடனான முன்பகையில் அவரைத் தாக்கச் சென்ற முத்துப்பாண்டி என்ற நபர், தடுக்க முயன்ற நர்மதா உள்ளிட்டோரை, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.,
இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.