சென்னை: டயட் இருப்பவர்கள் வெள்ளரி அடையை செய்து சாப்பிடலாம். இது மிகவும் சத்தானது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது.
தேவையான பொருட்கள் :
புழுங்கலரிசி – 1 கப்,
முளை கட்டிய பாசிப்பயறு, கொண்டைக்கடலை – தலா 1/2 கப்,
தோல் சீவி பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் – 3/4 கப்,
காய்ந்த மிளகாய் – 4,
இஞ்சி – சிறு துண்டு,
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – சிறிது,
நல்லெண்ணெய், உப்பு – தேவைக்கு
செய்முறை: முதலில் புழுங்கலரிசியை ஊறவைத்து அதில் பாசிப்பயறு, கொண்டைக்கடலை, காய்ந்தமிளகாய், இஞ்சி சேர்த்து அரைக்க வேண்டும். பின் முக்கால் பதம் அரைந்ததும், வெள்ளரிக்காயை மாவுடன் கலந்து, உப்பு சேர்த்து அடைமாவு பதத்திற்கு அரைத்து நன்கு கலக்க வேண்டும்.
அதன்பின், கறிவேப்பிலை சேர்த்து, கல் காய்ந்ததும், மிதமான தீயில் அடையை தட்டி, இருபுறமும் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுத்து பரிமாற வேண்டும். இப்போது சுவையான, சத்தான வெள்ளரிக்காய் அடை தயார்.