சென்னை: சில சிம்பிளான கிச்சன் ஹேக்ஸ்களை பின்பற்றி சமையலை வேகமாகவும், ருசியாகவும் செய்து முடிக்க தெரிந்திருக்க வேண்டிய சமையல் குறிப்புகள் உங்களுக்காக.
கத்தியை லேசாக சூடு செய்துவிட்டு அதன் பின்னர் வெங்காயத்தை நறுக்கினால், கண்களில் தண்ணீர் வராது. எலுமிச்சை சாதம் கிளறுவதற்கு முன் இஞ்சி, பச்சை மிளகாயை மிக்ஸியில் அரைத்து நன்கு வதக்கி சாதத்தில் போட்டு கிளறினால் சுவை கூடுதலாக இருக்கும்.
கூட்டு, மோர்க்குழம்பு ஆகியவற்றிக்கு தேங்காய் எண்ணெயில் தாளித்தால் சுவையும் மணமும் அருமையாக இருக்கும். பீட்ரூட் அல்வா செய்வதாக இருந்தால், முதலில் பீட்ரூட்டை பாலில் வேக வைத்து பின்னர் மசித்து செய்தால் சுவையாக இருக்கும். காய்கறிகளில் படிந்திருக்கும் ரசாயனங்களை போக்க, உப்பு மற்றும் சோடா கலந்த தண்ணீரில் ஊறவைத்து சமைப்பது நல்லது.
நறுக்கிய உருளைக்கிழங்கை சிறிது பயத்தம் பருப்பு மாவில் கலந்து சிப்ஸ் செய்தால் மொறு மொறுப்பாக வரும். கீரையில் உள்ள சத்தை தக்க வைக்க, சமைக்கும் போது ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்க்கலாம்.
பருப்பு வடை செய்யும் போது சிறிதளவு இஞ்சியை துருவி சேர்த்தால் சுவை கூடுவதோடு எளிதில் ஜீரணமாகும். நூடுல்ஸ், பாஸ்தா செய்வதற்கு தக்காளி சேர்ப்பதற்கு பதிலாக தக்காளி கெச்சப் சேர்த்து செய்தால் சுவையும் நிறமும் சூப்பராக இருக்கும்
சாம்பார் பொடி அரைக்கும் போது அதனுடன் கல் உப்பு சேர்த்து அரைத்தால், வண்டு, பூச்சிகள் வராது. மீந்து போன இடியாப்பத்தை வெயிலில் காய வைத்தால் சுவையான வடகம் தயார். வெண்டைக்காய் முற்றாமல் இருக்க, காயின் மேல் மற்றும் அடிப்பகுதியை நறுக்கி வைக்கலாம்.