சென்னை: இட்லி, தோசைக்கு சுவையான பொடி வகைகளை தயார் செய்து சாப்பிடலாம். அந்த வகையில் இன்று நாம் கொள்ளு இட்லி பொடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கொள்ளு – அரை கப்
காய்ந்த மிளகாய் – 5
பெருங்காயத்தூள் – சிறிதளவு
உப்பு – தேவைக்கு
செய்முறை: வாணலியை சூடாக்கி அதில் கொள்ளு, பெருங்காயத்தூளை கொட்டி வறுக்கவும். மிளகாயையும் வாசம் வரும் வரை வறுத்தெடுத்துக்கொள்ளவும்.
ஆறிய பின்னர் அனைத்தையும் சேர்த்து மிக்சியில் அரைக்கவும். சுவையாக கொள்ளு இட்லி பொடி ரெடி. இந்த பொடியை சூடான சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம்.