தஞ்சாவூா்: தஞ்சை வழியாக செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சம்பவத்தன்று பயணம் செய்த பெண் தனது இருக்கையில் வைத்திருந்த தங்க நகைகளை ஒருவர் திருடி கொண்டு சென்றார்.
இது குறித்து அந்தப் பெண் தஞ்சை ரெயில்வே இருப்பு பாதை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் நகையை திருடியது
சேலம் மாவட்டம் சின்ன திருப்பதி ராணி அண்ணா நகரை சேர்ந்த பொ. சரவணன் ( வயது 48) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சரவணனை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு தஞ்சாவூர் நீதித்துறை மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் எண் 2 -ல் நடந்து வந்தது. இந்த வழக்கை நீதிபதி பிரபுராம் விசாரித்து குற்றவாளி சரவணனுக்கு 1 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.