சென்னை: மணிரத்னம் இயக்கிய ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் இணைந்து நடித்த விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஆகிய மூவரும் மீண்டும் இணைந்துள்ள படம் ‘காந்தி டாக்ஸ்’. இந்த படம் வசனங்கள் எதுவுமின்றி மௌனப் படமாக உருவாகியுள்ளதுடன், டார்க் காமெடி ஜானரில் அமைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
கிஷோர் பி. பெல்லேக்கர் இயக்கியுள்ள இப்படத்தை ஜீ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் டீசர், சில மாதங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், ‘காந்தி டாக்ஸ்’ படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, காந்தி நினைவுதினமான வருகிற 30-ம் தேதி இந்த படம் உலகளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.