புதுடில்லி: ஈரானில் இருந்து உடன் வெளியேறுங்கள் என இந்திய வெளியுறவுத் துறை அறிவுறுத்தி உள்ளது.
ஈரானில் வன்முறை அதிகரிப்பதால் இந்திய வெளியுறவுத் துறை இந்தியர்கள் கிடைக்கும் போக்குவரத்து வசதியில் வெளியேறவும், தூதரகத்தை தொடர்பு கொள்ளவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதன் காரணமாக அந்நாட்டிற்கு இந்தியர்கள் பயணம் செய்வதையும் அங்கிருப்பவர்கள் நாடு திரும்பவும் இந்திய வெளியுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஈரானில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதால், அந்நாட்டில் இருக்கும் இந்தியர்கள் அனைவரும் கிடைக்கும் போக்குவரத்து வசதிகள் மூலம், வணிக விமானங்கள் உட்பட, ஈரானை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஈரானில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாகவும், போராட்டங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பகுதிகளைத் தவிர்க்கவும், ஈரானில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் தொடர்பில் இருக்கவும், உள்ளூர் ஊடகங்களை கண்காணித்து ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுகிறதா எனப் பார்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது.