தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே வல்லம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை எம்.எல்.ஏ. டி.கே.ஜி.நீலமேகம் வழங்கினார்.
தஞ்சாவூர் அருகே வல்லம் பேரூராட்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மேல்நிலைக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலை இல்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் எம்எல்ஏ டி.கே.ஜி.நீலமேகம் தலைமை வகித்து 98 மாணவர்களுக்கு விலையில்லாத சைக்கிள்களை வழங்கினார். இதில் தஞ்சாவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சோமு. செல்வகுமார், வல்லம் பேரூர் கழக செயலாளர் டிகேஎஸ்ஜி.கல்யாணசுந்தரம், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர்கள் மாணிக்கம், அப்துல் முகமது யூசுப் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.