திருச்சி: ‘காங்கிரஸின் கொள்கையும், திமுகவின் கொள்கையும் ஒன்றா?’ – இபிஎஸ் கேள்வி எழுப்பினார்.
திருச்சி மாவட்டம் பஞ்சபூரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “இதே திருச்சியில் நேற்று முன்தினம் திமுக மாநாடு நடைபெற்றது. அப்போது தே.ஜ.கூட்டணி குறித்து முதலமைச்சர் விமர்சனம் செய்தார். இது வெற்றிக் கூட்டணி, அருமையான கூட்டணி. பல்வேறு வார்த்தைப் போருக்கு இடையில்தான் காங்கிரஸும், திமுகவும் கூட்டணி வைத்துள்ளன.
நாங்கள் இணைந்து மீண்டும் அற்புதமான ஆட்சியை அமைப்போம். நான்கில் ஒருபங்கு அறிவிப்புகள் கூட தற்போதுவரை திமுகவால் நிறைவேற்றப்படவில்லை. தமிழ்நாட்டில் அதிமுக செய்தது பொற்கால ஆட்சி. ஒரே கொள்கையின்கீழ் கூட்டணியில் இணைந்துள்ளதாக ஸ்டாலின் கூறுகிறார். காங்கிரஸின் கொள்கையும், திமுகவின் கொள்கையும் ஒன்றா? திமுகவும், கம்யூனிஸ்ட் கொள்கையும் ஒன்றா? திமுக என்றால் குடும்பக் கட்சி என்று பொருள். தேர்தல் நேரத்தில் கூட்டணி என்பது இயல்பு. திமுகவை விரட்டத்தான் இந்த தேசிய ஜனநாயக கூட்டணி இவ்வாறு அவர் தெரிவித்தார்.