சென்னை: திமுக தனது கூட்டணியில் இடம் பிடித்துள்ள ஈஸ்வரன் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளது.
தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று ஒவ்வொரு கட்சிகளுக்கும் இடங்களை ஒதுக்கீடு வருகிறது திமுக.
அந்த வகையில் ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு திமுக இரண்டு தொகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இரண்டு தொகுதிகளிலும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்களும், மதிமுக-வுக்கு 4 இடங்களும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றிற்கு தலா 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது.