தேவையான பொருட்கள்:
பூண்டு – 7 பல்
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
தக்காளி – 4
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு..
நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
செய்முறை: முதலில் மிக்சர் ஜாரில் 6-7 பூண்டு பற்கள், புளி ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு மற்றும் 4 மீடியம் அளவு தக்காளியை நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நீர் ஊற்றாமல் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காய தூள் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு அதில் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பின் அதை மூடி வைத்து, பச்சை வாசனை போய் எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக வைத்து இறக்கினால், சுவையான பூண்டு தக்காளி சட்னி தயார்.