சென்னை: கோடைகாலம் ஆரம்பம் ஆகிவிட்டது. உடலுக்கு ஆரோக்கியத்தையும் குளிர்ச்சியையும் தரும் அன்னாசி எலுமிச்சை பானம் தயாரிக்கும் செய்முறை பற்றி தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
நீர் அல்லது சோடா – 250 மில்லி
சர்க்கரை – 2 முதல் 3 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
அன்னாசி பழச்சாறு – 2 கப்
கருப்பு உப்பு – 1 தேக்கரண்டி
கருப்பு மிளகு தூள் – 1 தேக்கரண்டி
ஐஸ்- தேவைக்கேற்ப
அன்னாசி துண்டுகள் – 1 தேக்கரண்டி
செய்முறை: முதலில், மிக்ஸி ஜாரில் சிறிது தண்ணீர் ஊற்றி சர்க்கரை கரைசலை தயார் செய்யவும். சர்க்கரை கரைந்த பிறகு, எலுமிச்சை சாறு, கருப்பு உப்பு மற்றும் கருப்பு மிளகு தூள் சேர்த்து ஒரு ஓட்டு ஓட்டவும்.
பின்னர் தேவையான அளவு ஐஸ் சேர்த்து மீண்டும் ஓட்டவும். இப்போது ஆரோக்கியத்தை அள்ளித்தரும் அன்னாசி, எலுமிச்சைப்பழசாறு ரெடி. தண்ணீர் அல்லது சோடா கலத்து சும்மா ஜில்லுன்னு குடிங்க.