காரைக்குடி: காரைக்குடி அருகே அதிகாலையில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட கும்பலை விரட்டி பிடித்துள்ளனர் நாதக கட்சியினர். இந்த வீடி ோ வைரல் ஆகி வருகிறது.
காரைக்குடி அருகே பாதரக்குடியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட கும்பலை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்த நாம் தமிழர் கட்சியினர், அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து மதுவை விற்பனைக்குக் கொடுத்தனுப்பிய டாஸ்மாக் மதுபான பார் ஊழியரிடமும் நாம் தமிழர் கட்சியினர் வாக்குவாதம் செய்தனர். காலை 5 மணிக்கு வந்தாலும் மது கிடைக்கும் என மது விற்பனை செய்யும் ஆசாமி கூறிய காட்சிகளும் வீடியோவில் பதிவாகியுள்ளன. இது சமூக வலைதளத்தில் தற்ோது வைரலாகி வருகிறது.