ஈரான்: மின் நிலையங்களை தாக்கினால், நாங்கள் இதைதான் செய்வோம் என்று டிரம்பின் எச்சரிக்கைக்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.
எங்கள் நாட்டின் மின் உற்பத்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கினால் அந்நாட்டின் ராணுவத்தளங்களுக்கு மின்சாரம் வழங்கும் நாடுகளின் மின் நிலையங்களை தாக்குவோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேல் மீதும் அமெரிக்கா இராணுவத்தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் ஹார்முஸ் ஜலசந்தியையும் மூடியுள்ளது. இதனால் ஆசிய நாடுகளில் பெட்ரோம் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் கப்பல் போக்குவரத்திற்காக ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கபடவில்லையென்றால் அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஈரானிய மின் உற்பத்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில் எங்கள் நாட்டின் மின் உற்பத்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கினால் அந்நாட்டின் ராணுவத்தளங்களுக்கு மின்சாரம் வழங்கும் நாடுகளின் மின் நிலையங்களை தாக்குவோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; “மின் நிலையங்கள் தாக்கப்பட்டால், ஆக்கிரமிப்பு ஆட்சியின் (இஸ்ரேல்) மின் நிலையங்களையும், அமெரிக்கத் தளங்களுக்கு மின்சாரம் வழங்கும் பிராந்திய நாடுகளின் மின் நிலையங்களையும், அத்துடன் அமெரிக்கர்களுக்குப் பங்குள்ள பொருளாதார, தொழில்துறை மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளையும் குறிவைத்து ஈரான் பதிலடி கொடுக்கும் என்ற எங்கள் முடிவை நாங்கள் அறிவித்துள்ளோம். நாங்கள் இதைச் செய்வோம் என்பதில் சந்தேகம் கொள்ளாதீர்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.