ஜெனீவா: உலகின் மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளது.
புதிய அறிக்கையின்படி பாகிஸ்தான் உலகின் மிகவும் மாசுபட்ட நாடாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஐ.கு. ஏர் நிறுவனம் உலக காற்றுத்தர அறிக்கையை வருடந்தோறும் வெளியிட்டு வருகிறது. 2025-ம் ஆண்டுக்கான பட்டியலை அது வெளியிட்டது.
புதிய அறிக்கையின்படி பாகிஸ்தான் உலகின் மிகவும் மாசுபட்ட நாடாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து வங்கதேசம் இரண்டாம் இடத்தில் உள்ளது தஜிகிஸ்தான் நாடு 3-ம் இடத்தை பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா 6-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவின் லோனி நகரம் உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகனப்புகை, தொழிற்சாலைக் கழிவுகள், கட்டுமானப் புழுதி மற்றும் பயிர்க் கழிவுகளை எரித்தல் ஆகியவை தெற்காசியாவில் காற்று மாசிற்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. உலகளவில் 143 நாடுகளில் வெறும் 13 நாடுகள் மட்டுமே உலக சுகாதார நிறுவனத்தின் காற்றுத் தர வழிகாட்டுதல்களைப் பூர்த்தி செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.