சென்னை: இயக்குனர் மற்றும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் பிரபல தெலுங்கு பட இயக்குனர் சந்திரசேகர் ஏலேட்டியுடன் கூட்டணி சேரப் போவதாகவும், இந்த படத்துக்காக அவருக்கு ரூ.50 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் விரைவில் ‘எல்.ஐ.கே.’ படம் திரைக்கு வரவுள்ளன. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கதாநாயகனான பிரதீப் ரங்கநாதன், தொடர்ச்சியாக வெற்றிப் படங்கள் கொடுத்து கவனம் ஈர்த்துள்ளார். ‘லவ் டுடே’, ‘டிராகன்’, ‘டியூட்’ என அவரது படங்கள் தொடர்ந்து ரூ.100 கோடி வசூலை தாண்டியுள்ளன.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் விரைவில் ‘எல்.ஐ.கே.’ படம் திரைக்கு வரவுள்ளன. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார்.
இதற்கிடையில் தெலுங்கு சினிமாவிலும் பிரதீப் ரங்கநாதன் கால்பதிக்க போகிறாராம். பிரபல இயக்குனர் சந்திரசேகர் ஏலேட்டியுடன் அவர் கூட்டணி சேரப்போவதாகவும், இந்த படத்துக்காக அவருக்கு ரூ.50 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாகவும் பேசப்படுகிறது.
குறுகிய காலத்திலேயே ரூ.50 கோடி சம்பளத்தை தொட்டிருக்கும் பிரதீப் ரங்கநாதனின் பயணம் திரையுலகில் கவனம் ஈர்த்துள்ளது.