கும்பகோணம்: கும்பகோணம் திமுக வேட்பாளர் ஓட்டு கேட்க செல்ல இருந்த பகுதியில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்த காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கும்பகோணத்தில் ஓட்டு கேட்க சென்ற திமுகவினரை வழி மறித்து விரட்டி அனுப்பிய பொது மக்களின் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது .
2026 சட்டமன்ற தேர்தலை ஒட்டி திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினராக சாக்கோட்டை அன்பழகன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார் .
இந்த நிலையில் தேர்தல் பரப்புரையாக கும்பகோணம் மூணாவது வார்டு பகுதியில் வேட்பாளர் அன்பழகன் தனது கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வாக்கு சேகரிக்க சென்றபோது அடிப்படை வசதிகள் கூட செய்து தராத உங்களுக்கு எதற்கு வாக்கு செலுத்த வேண்டும் இனி யாரும் இங்கு ஓட்டு கேட்டு வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் அங்கு வந்த திமுகவினரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது .