சென்னை: முளைகட்டிய பயிறு வகைகள் ஊட்டச்சத்தின் ஆற்றல் மையங்கள் என்று அழைக்கப்படுகின்றன.ஏனெனில் அந்த முளைகளில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது.
முளைகட்ட வைப்பதன் மூலம் ஊட்டச்சத்துக்களின் உயிர் கிடைக்கும் தன்மையையும் அதிகரிக்கிறது.முளைகட்டிய பயறுகளை உட்கொள்வது நீரிழிவு அல்லது உடல் பருமன் உள்ளவர்களுக்கு கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் என்று பல ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
அதேபோல முளைகட்டிய பயிறில் ஆக்ஸிஜனேற்றிகள் அதிக அளவில் நிறைந்திருப்பதால் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி நடுநிலையாக்க உதவுகின்றன.
அதோடு முளைகட்டிய பயிறில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளும் அதிகமாக உள்ளன. அதோடு நம்மடைய உடலுக்குத் தேவையான அத்தியாவசிய கொழுப்பு அமில உள்ளடக்கமும் அதிகம் இருக்கின்றன.
இதனால் முளைகட்டிய பயிறை சாப்பிடும்போது வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதோடு நீண்ட நேரம் பசியெடுக்காமல் இருக்கச் செய்வதால் அதிகப்படியான கலோரிகள் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க முடியும்இ இதனால் எடையும் கட்டுக்குள் இருக்கும்.